கட்டுநாயக்காவில் தங்கத்துடன் பெண் கைது!

சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைச் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கை வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ளவர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 45 வயதான பெண் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Powered by Blogger.