வவுனியாவில் புதையல் தோண்டிய ஜவர் கைது!

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் புதையல் தோண்டிய 5 பேரை
பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து புதையல்தோண்டும் ஆயுதங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 12.10மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அதிகாலை 12.10 மணியளவில் வாரிக்குட்டியூர், சங்கராபுரம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் 5 பேரடங்கிய குழுவினர் புதையல்தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் சென்ற பொலிஸ் குழுவினர் புதையல் தோண்டிய 5 பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து மண்வெட்டி, அலவாங்கு என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த மூவரும் மதவுவைத்தகுளம் புதியைச் சேர்ந்த ஒருவரும் சாந்தசோலைப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 42, 44, 27, 30, 29 வயதுடையவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.