நினைவேந்தலைச் சிறப்புற நடத்தியோருக்கு முதலமைச்சர் நன்றி பாராட்டு!

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து
நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.கட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து மிகக் குறுகிய காலத்துக்குள்ள இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்திய எல்லோருடைய பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

சில குறைபாடுகள் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டன. நிகழ்வின் தார்ப்பரியம் உணர்ந்து எமது மக்கள் பிரதிநிதிகளினதும், மற்றோரினதும் பொறுமை முதிர்ச்சி என்பன நிமித்தமும் அவற்றைப் பொருட்படுத்தாமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது.

குறுகிய கால ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வைச் சிறப்புறச் செய்ய உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகும் என தெரிவித்தார்.
Powered by Blogger.