காணாமல் போன மீனவர்கள் கரை திரும்பினர்!

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பகுதியில் மீனவர்கள் மூவர் கடற்தொழிக்கு
சென்று காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்றுமுன் தினம் காணாமல் போனதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில், மீனவர்கள் கரைத் திரும்பியுள்ளனர்.

யாழ். நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) உட்பட செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே காணாமல் போயிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
Powered by Blogger.