யமுனா ஏரியில் தவில் வித்துவான் சடமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள யமுனா ஏரியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தவில் வித்துவான் ஒருவரே உயிரிந்துள்ளார்.

 5 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார். அவர் தேடப்பட்டுவந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர அள்ளச் சென்றுள்ளார். அப்போது துர்நாற்றம் வீசியுள்ளது. அது தொடர்பில் கிராம அலுவலருக்கு அவர் அறிவித்துள்ளார்.

 கிராம அலுவலர் மூலம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 யமுனா ஏரித் தண்ணீரை நாங்கள் பாவிக்கின்றோம். அங்கு பாதுகாப்பு வேலி இல்லை. பாதுகாப்பு வேலி அமைத்துத் தாருங்கள் என்று பல தரப்பினரிடமும் கேட்டோம். எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இப்படியான உயிரிழப்புக்கள் நடக்கின்றன. முன்னரும் உயிரிழப்புக்கள் நடந்துள்ளன என்று   பிரதேச மக்கள் தெரவித்தனர்.

Powered by Blogger.