ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் மே தினக் கூட்டம்!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம், மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

   கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 அத்தோடு, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

 இதன்போது விவசாயிகள், மீனவர்கள், கால்நடை பண்ணையாளர்கள், ஆசிரியர்கள், உள்ளுராட்சிசபை தொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள், தொண்டராசிரியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.