வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியில் கடை அடைப்பு!

மே தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (07) மூடப்பட்டுள்ளது. 

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச வர்த்தக சங்கத்தினரின் வேண்டுகோளின் பிரகாரம் வர்த்தக நிலையங்கள் மே தினத்திற்காக அடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும், தனியார் போக்குவரத்து பேருந்து சேவை மாத்திரம் இயங்கி வருவதாகவும் இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் சித்தாண்டி மாவடிவேம்பில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.