மருதானை பகுதியில் போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் கைது!

மருதானை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கொழும்பு மத்திய புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 89 போதை மாத்திரைகளும், 9 கிராம் கொக்கைன் போதைப்பொருளும் மற்றும் 6.1 கிராம் அய்ஸ் எனும் போதைப்பொருளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மருதானை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.