எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்பு கிடைத்திருக்க ​வேண்டும்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பு தனக்கு கிடைத்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார்.
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், நான் வகித்து வந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சிற்கு மேலதிகமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பும் எனக்கு கிடைத்துள்ளது. எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்பு கிடைத்திருக்க ​வேண்டும். ஐ.தே.கவினுள் முழுமையான மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும். இதனை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
Powered by Blogger.