புகையிலை பாவனையைத் தவிர்க்கவும்! - பாலித அபேகோன்

உலக  புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. புகையிலையும் இருதய நோய்களும் என்பதே இந்த நாளுக்கான தொனிப்பொருள் ஆகும்.

 இன்று நாட்டில் உள்ள அனைவரும், புகையிலை பாவனையைத் தவிர்த்து புகையிலை உற்பத்திகளின் விற்பனையில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகார சபையும், மருத்துவ சங்கங்களும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

 புகையிலை பாவனை காரணமாக நாடெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் அகால இறப்புக்களைத் தழுவுகின்றனர். எனவே புகையிலைப் பாவனையில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் அவசியம் என்று அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் வலியுறுத்தியுள்ளார்.

Powered by Blogger.