தேசிய ரணவிருவின் முதல் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

படை வீரர்களை நினைவுகூரும் 2018 ஆம் ஆண்டு தேசிய ரணவிரு மாதத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டது.

இந்த கொடி அணிவிப்பு நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

இந்தக் கொடி அணிவிப்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மாகாண ஆளுநர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள். முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவுகூரும் விதமாக வருடந்தோறும் இந்த ரணவிரு மாதம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ரணவிரு கொடி விற்பனையும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.