புதிய அலுவலகங்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு!

கிராம உத்தியோகத்தர்களுக்கு 14 ஆயிரம் உத்தியோகபூர்வ அலுவலகங்களை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக ஆயிரம் அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாகவும்  இதற்காக 200 கோடி ரூபா செலவிடப்படும். கிராம உத்தியோகத்தர்கள் தமது சேவைகளை இலகுவாக நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள கிராம உத்தியோகத்தர்களது அலுவலகங்கள் தற்போது அதிகமாக தற்காலிக கட்டிடங்களில் இருந்து இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.