வடக்கு கிழக்கில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்!

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கருத்து தெரிவித்த காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வடக்கில் ஆவா குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இவர்கள் அனைவரும் விசேட சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.


Powered by Blogger.