கொலைக்குற்றவாளிக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை!

கொழும்பு - மாளிகாவத்தை பிரதேசத்தில், கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் நபர் ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த குற்றவாளிக்கு மரண  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரை கொலை செய்ததோடு, பாதிக்கப்பட்ட நபர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றையும் குற்றவாளி திருடிச்  சென்றிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த மலிந்த த சில்வா என்ற நபருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.