வவுனியா தமிழ் மத்தியின் வீரர் பளுதூக்கலில் தங்கம் வென்றார்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ்.கஜீபன் தங்கப்பதக்கம் வென்றார்.

 குருநகர் சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் 105 கிலோ எடைப் பிரிவில் 128 கிலோ பளுவைத் தூக்கியே கஜீபன் தங்கப்பதக்கம் வென்றார்.

 சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் துஜிந்தன் 100 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Powered by Blogger.