பள்ளத்தில் பாய்ந்து வேன்! மூவர் காயம்!

பதுளை, ஹலிஎல, வெலிமடை  பகுதியில் இன்று அதிகாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

 அதில் பயணஞ் செய்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில், பதுளை மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.