யாழில்“இன்புளுவன்ஸ்ஸா”தொற்றுநோயால் எச்சரிக்கை!

பன்றிக்காச்சல் எனப்படும் “இன்புளுவன்ஸ்ஸா” தொற்றுக்கான
அறிகுறிகள் தென்பட்ட 12 பேர் கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் இனம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதாக யாழ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு அதிகாரி வைத்தியகலாநிதி ஜி.ரஜீவ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு “இன்புளுவன்ஸ்ஸா” தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டவர்களின் குருதி மாதிரி பெறப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

தற்போதைய காலநிலை இந்த நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. 2008 – 2009 ஆம் ஆண்டுப் பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் காணப்பட்டதெனினும் அப்போது கட்டுப்பாட்டக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தென்பகுதியில் அண்மையில் இந்த நோய் தாக்கம் இனம்காணப்பட்டிருந்தனைத் தொடர்ந்து வடக்கில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இது காற்றால் பரவும் நோயாக இருப்பதால் பொது இடங்களுக்கு செல்லுதல், அதிக சன நடமாட்டப் பகுதிகளை இயன்றளவு தவிர்த்தல், தொடர்பில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அலோசனை வழங்கியுள்ளனர். 
Powered by Blogger.