யாழ். குடும்பஸ்தரை காணவில்லை.!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்று வருவதாகக் கூறிச்
சென்ற குடும்பஸ்தரொருவர் காணாமல் போயுள்ளார்.

கடந்த-21 ஆம் திகதி கொழும்பு சென்று வருவதாகக் கூறிச் சென்ற குறித்த குடும்பஸ்தர் இதுவரை வீடு திரும்பவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த சிவராசா உதயகுமார்(வயது-48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணாமற் போனவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பாக காணாமல் போனவரின் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.