அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு12 வருட சிறை!

இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு 12 வருட சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆண்டு மே மாதம் 31ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில், இலங்கையை சேர்ந்த பயணி ஒருவர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தில் ரகளை செய்ததை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னில் தரையிறக்கப்பட்டது.

பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் குறித்த இலங்கை பயணியை மெல்போர்ன் பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது 
Powered by Blogger.