தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இலங்கையில் !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இலங்கையில் இருப்பதாக இராணுவதளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


அத்துடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமான ஹிந்துவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், நாட்டில் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இருக்கின்றனர். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் வெளிநாடுகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக, உள்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆபத்து காணப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் 12 ஆயிரம் சீனர்களும், 10 ஆயிரம் இந்தியர்களும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சிலருடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஈடுபடுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.