பரபரப்பாகும் கொழும்பு அரசியல்!

Perpetual Treasuries நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தனக்கு அனுப்பிவைக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரியுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கொழும்பு அரசியல் பரபரப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அரசியலில் பிணைமுறி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், பிணைமுறி சம்பவத்துடன் தொடர்புடைய அர்ஜூன் அலோசியஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜூன் அலோசியஸூனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 118 பேர் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.