14 வய­துச் சிறுமியை துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கிய காவல்த்துறை அதி­கா­ரி மறி­யலில்!

சிறுமி ஒரு­வரை துர்­ந­டத்தைக்கு உள்­ளாக்­கி­னார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் பொலிஸ் அதி­கா­ரியை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­
மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று உத்­த­ர­விட்­டது.

14 வய­துச் சிறுமி ஒரு­வரை துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கி­னார் என்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

சிறு­மி­யின் தாயும் இதற்கு உடந்தை என்று கூறப்­ப­டு­கின்­றது. சிறுமி இது தொடர்­பில் வாக்­கு­மூ­லம் அளித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் கடந்த மாதம் கிளி­நொச்சி நீத­வான் மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

தாயார் இது தொடர்­பில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்ட நிலை­யில் சிறு­மியை சிறு­வர் நன்­ன­டத்­தைப் பிரி­வில் ஒப்­ப­டைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

சிறுமி தொடர்­பான மருத்­துவ அறிக்­கை­யை­யும் நீதி­மன்று கோரி­யி­ருந்­தது.

இது தொடர்­பான வழக்கு நேற்று நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­த­பப்ட்­டார்.

அவரை எதிர்­வ­ரும் 12 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மா­றும், அன்று அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­து­மா­றும் நீதி­வான் மன்று உத்­த­ர­விட்­டது. 
Powered by Blogger.