கூட்டு எதிர்க்கட்சியுடன்16 உறுப்பினர்கள் இணைவு!

அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின்
கூட்டத்தில், அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் குழு பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் தமக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இரு தரப்பினரும் கூட்டு எதிர்க்கட்சி என்ற வகையில் செயற்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு கிடைக்க கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதன்படி தற்போதிருக்கின்ற நிலமைக்கு அமைவாக அந்த வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே என்றும் டிலான் பெரேரா கூறினார்.
Powered by Blogger.