லார்ட்ஸ் டி-20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!

லார்ட்ஸ்: லார்ட்சில் நடந்த டி-20 போட்டியில், ஐ.சி.சி., உலக லெவன்
அணியை வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.லண்டன் லார்ட்ஸ் நகரில், ஐ.சி.சி., உலக லெவன் - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டி-20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அதிபட்சமாக எவின் லெவிஸ் 58 ரன் எடுத்தார். ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.கடின இலக்கை நோக்கி பேட்டிங் செய்த உலக லெவன் அணி, 16.4 ஓவரில் 127 ரன்களுக்கு சுருண்டது. பெரேரா அதிகபட்சமாக 61 ரன் குவித்தார். வெஸ்ட் இண்டீசின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
Powered by Blogger.