21 அரச அதிகாரிகள் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது

இந்த வருடத்தில் கடந்த 6 மாத காலத்தில் லஞ்சம் பெற்ற குற்றச் சாட்டின் கீழ் 21 அரச அதிகாரிகள்
கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் அதிகூடிய லஞ்ச குற்றச்சாட்டாக 2 கோடி ரூபா லஞ்சம் பெற்ற சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் ஜனாதிபதி செயலக பிரதானியும், அரச மரக் கூட்டுத்தாபன தலைவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, உதவிப் பொலிஸ் அதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரும், ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகள் இருவரும், கலால் திணைக்கள அதிகாரியொருவரும் இந்த 21 பேரில் அடங்குவதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  
Powered by Blogger.