மாகாண சபைத் தேர்தல், புதிய முறையிலா? பழைய முறையிலா?

மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதா? இல்லையா? என்பது
தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறியும் வகையிலான விசேட விவாதமொன்று எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரி முறையில் நடாத்தியதனால் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
1978 ஆம் ஆண்டு ஜனநாயக சோசலிக குடியரசு அரசியல் யாப்பில் ஜே.ஆர். ஜெயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் முறைமையே இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதனை மாற்றம் செய்யப் போனதனாலேயே பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
ஜே.ஆர். ஜெயவர்தனவின் திட்டத்தில் மாற்றங்களை செய்யும் போது ஒரு முறைக்கு பல தடவைகள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாததனால் ஏற்பட்ட விளைவையே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனுபவிக்க நேர்ந்தது எனவும் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
Powered by Blogger.