துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஜூலை 27-ம் தேதி வரை தகவல் அளிக்கலாம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட
ஒருநபர் கமிசனில், தகவலை பிரமாண வாக்குமூலமாக பதிவு செய்யும் கால அவகாசத்தை வரும் ஜூலை 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒருநபர் விசாரணை ஆணைய அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை கமிஷனில், தகவலைப் பிரமாண வாக்குமூலமாகப் பதிவு செய்யும் கால அவகாசத்தை  வரும் ஜூலை 27 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒருநபர் விசாரணை ஆணைய அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து உத்தரவிட்டது. இதன்படி, கடந்த 4-ம் தேதி தூத்துக்குடிக்கு வந்த, நீதிபதி அருணா ஜெகதீசன் பழைய அரசு சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கேம்ப் அலுவலகத்திற்குச் சென்று பார்வையிட்டார். பின், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனது முதல்கட்ட விசாரணையைத் துவக்கினார். தொடர்ந்து இரண்டுநாட்களாக துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை  பெற்றவர்கள், உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகச் சம்மந்தப்பட்டவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தகவல் தெரிந்தவர்கள், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் ஆகியோர் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பிரமாண உறுதிமொழிப் பத்திரமாக சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகத்திலோ, தூத்துக்குடியில் உள்ள கேம்ப் அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தாக்கல் செய்யலாம்" எனக் கூறியிருந்தார்.இவ்வாறு விசாரணை ஆணையத்தில் அளிக்கப்படும் பிரமாண பத்திரங்களை 3 நகல்கள் எடுத்து வரும் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கால அவகாசத்தை இம்மாதம் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்தக்கால வரம்பு வரும் ஜூலை 27-ம் தேதி வரை தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது. சத்தியப் பிரமாண  உறுதிமொழி பத்திரங்கள் மனுக்களைச் சென்னை அலுவலகம் மற்றும் தூத்துக்குடி அலுவலகத்தின் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.