சிறுத்தை கொலை தொடர்பில் 2 பேர் கைது!

கிளிநொச்சி பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவரை கைது செய்துள்ளதாக
பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறுத்தையை கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து உரியவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழல் பாதுகாப்பு குழு உறுப்பினரும் ஜாதிக சங்க சம்­மே­ள­னத்தின் செய­லாளருமான ஆனந்த சாகர தேரர் மனுவொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து கிராம வாசிகளில் 10 இற்கும் அதிகமானோரைத் தாக்கி காயப்படுத்தியிருந்தது. வனப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இதற்கு எதிரான நடவடிக்கைகள் தோல்வியடைந்த போதே பொதுமக்கள் இந்த சிறுத்தையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக அப்பிரதேச செய்திகள் தெரிவித்திருந்தன
Powered by Blogger.