நாடு பாதுகாப்பற்று !


வடக்கில் தற்பொழுது சந்தேகத்துக்கிடமான இளைஞர்கள் பற்றிய தகவல்கள்
கிடைத்துள்ளதுபோன்று,   புலிகள் பயன்படுத்திய சீருடைகள், ஆயுதங்கள் என்பனவும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதனால், நாட்டின் பாதுகாப்பை பொது மக்கள் தாமாகவே முன்னெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் கூட கடந்த காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையில், இதுபோன்ற அறிவித்தலை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லையெனவும், மக்கள் இன்று பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் கூறியுள்ளார்.
இன்றைய சகோதர மொழி தேசிய ஞாயிறு வார இதழொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Powered by Blogger.