தாயகம் திரும்பிய சிறுவன் உள்பட 7 பேர் தாயக கடற்பரப்பில் மீண்டும்கைது!

ஈழத் தமிழர்களில் தமிழக அகதி முகாங்களிலிருக்கும் சிறுவன் உட்ப்பட 5 பேர் இன்று கடல் வழியாக தாயகம் திரும்பினர்.
அவர்களில் ஒருவர் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து வந்துள்ளார்.

சட்டவிரோதமாக படகில் வருகை தந்த குற்றச்சாட்டில் அவர்கள் 5 பேரும் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சட்டவிரோதமாக படகில் ஏற்றிவந்த பருத்தித்துறையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகலைச் சேர்ந்த மூவர் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், 7 பேரும் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுடன் அண்மைய நாள்களில் தமிழக அகதி முகாம்களிலிருந்து 33 ஈழத் தமிழர்கள் சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.