ஆசிய நாட்டு இளைஞர் கலிபோர்னியா தேர்தலில் போட்டி!

கலிபோர்னியாவில் கவர்னர் பதவிக்கு இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் போட்டியிடுகிறார்.


கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்தவர் சுபம் கோயல். இவரது பெற்றோர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

சுபம் கோயல் கடந்த ஆண்டு பொருளாதாரம் மற்றும் திரைப்படத் துறையில் தனது பட்டப் படிப்பை நிறைவு செய்தார். பெற்றோர்களை போலவே தானும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே கலிபோர்னியாவுக்கான கவர்னர் தேர்தலில் சுபம் கோயல் போட்டியிடுகிறார். வருகிற நவம்பர் 6-ஆம் திகதி இந்தத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக கோயல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.