காற்று மட்டும் சுவாசித்து உயிர்வாழும் அதிசய மனிதர்!

குஜராத் மாநிலம், மேக்சனா மாவட்டத்தில் உள்ள பிரக்லாத் ஜனி என்ற 88 வயந்தானவர் கடந்த 70 வருடங்களாக காற்றை மட்டும் சுவாசித்து வாழ்ந்து வருகிறார்.


பிரக்லாத் ஜனி 70 வருடங்களுக்கும் மேலாக வெறும் காற்றை மட்டும் சுவாசித்து உயிர்வாழ்ந்து வருகின்றார். இவரை கிராமத்தினர் மாதாஜின் என்றும், விஞ்ஞானிகள் பிரீத்தெரியன் என்றும் அழைக்கின்றனர்.

ஜனி வித்தியாசமான சக்திகளை கொண்டவராக உள்ளார். உணவு, தண்ணீர் என எதையும் உண்ணாமல் வாழ்ந்து வரும் அவர், வெறும் காற்றை மட்டும் சுவாசித்து வாழ்ந்துவருகிறார். இவரை விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தியுள்ளனர். இருப்பினும் அவர் எப்படி உயிர் வாழ்கிறார் என கண்டறியமுடியவில்லை.

ஜனி உணவு, நீர் அருந்தாததால் சிறுநீர் கூட கழிக்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார்.

இப்படி அதிசய நபராக இருக்கும் அவரிடம் ஆசி வாங்க பல தலைவர்கள் வந்து செல்கிறனர். தன்னை காண வரும் பக்தர்களிடம் காணிக்கை எதுவும் வாங்காமல் இலவசமாக ஆசி வழங்குகிறார். எப்படி 70 வருடங்களாக உயிர்வாழ்ந்து வருகிறார் என விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். 
Powered by Blogger.