விடுதலைப் புலிகளும் அவர்களின் நோக்கம் அழிக்கப்படவில்லை!

நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்படவேண்டுமென்ற விடயத்தினை ஏற்றுகொள்ள முடியாது என அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு நாடு அமைதியான சூழலில் இருக்கும் பொழுது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் நாட்டை ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே போரிட்டனர். போர் முடிவடைந்த பின்னரும் அவர்களது நோக்கங்கள் முடிவுறவில்லை. நாட்டை இரண்டாக பிரித்து தனி ஈழத்தினை உருவாக்குவது விடுதலை புலி இயக்கத்தின் ஆதரவாளர்களின் தற்போதைய அரசியல் நோக்கமாக காணப்படுகின்றது.

போருக்குப் பின்னர் தற்போதைய சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஈழத்தினை பிரித்து தனியாட்சியினையே கோருகின்றனர். தனியாட்சி பெற்றுகொள்ள அரசியல்வாதிகள் முயற்சிக்கும்போது நாட்டில் தற்போது காணப்படும் அமைதி சீர்குலைவதற்கு இது முழு காரணமாக அமைந்துவிடும். அரசியல்வாதிகளின் நாட்டைபிரிக்கும் எண்ணங்களுக்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த தடைசட்டமானது இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாத்து வருகின்றது. போர் காலத்தில் மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். அதுபோன்ற மனித உரிமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தவிர்த்து கொள்வதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பலமாக அமைந்தது.

அந்நிய அமைப்புக்களின் சதிகளிலிருந்து மக்களின் உரிமைகளை பேண வேண்டுமானால் பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படக்கூடாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமே நாட்டின் சமத்துவம் ஒற்றுமை போன்றவற்றை நிலையாக பேண முடியும். பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட்டால் நாட்டின் சமத்துவம் சீர்குலையும்.

இலங்கையில் 30 வருடகாலமாக நிலவிய போர்நிலைமைகளின் போது மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்டன. மக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. இருப்பினும் அந்த நிலைமைகளிலிருந்து மக்கள் மீண்டுவருவதற்கு பயங்கரவாத தடைசட்டம ஆறுதலாக அமைந்தது.

ஆகவே பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கபடவேண்டுமென்ற விடயத்தினை ஏற்றுகொள்ள முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். 
Powered by Blogger.