உள்ளூராட்சி நிறுவனங்களில் சேவையாற்றும் சில சேவையாளர்களும் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை!

தமக்களுக்குச் சேவை செய்யாமல் சம்பளத்தைப் பெறும் மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவையாளர்களும் அதிகாரிகளும், பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.


பெல்மதுளை தேர்தல் தொகுதியின் அபிவிருத்திக்குழு கூட்டம், சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுகத்தில் அண்மையில்  இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் "சப்ரகமுவ மாகாணத்தில், ஒரு சில உள்ளூராட்சி நிறுவனங்களில் சேவையாற்றும் சில சேவையாளர்களும் அதிகாரிகளும், காலையில் அலுவலகங்களுக்கு வருகைதந்து வரவுப் பதிவேட்டில் கையொப்பம் இடுகின்றனர். அதன் பின்னர் கடமை நிமித்தம் வெளியே செல்வதாகக் கூறி, வெளியே செல்லும் புத்தகத்தில் கையொப்பம் இட்டு, அவர்களது சொந்தத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.

சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு சில உள்ளூராட்சி நிறுவனங்களில் சேவையாற்றும் சில சேவையாளர்களும் அதிகாரிகளும், அலுவலக நேரங்களில் அவர்களின் சொந்த வியாபார நிலையங்களை நடத்துவதோடு, ஓட்டோ செலுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர் என, இதன்போது மாகாண ஆளுநரிடம் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டன.

இதற்குப் பதிலளித்து, தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாகாண ஆளுநர், "அரச தொழிலுக்காக உள்வாங்கப்படும் நபர்கள், அந்தத் தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்காமல் தாம் தொழில் புரியும் நேரங்களில் சொந்தத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது, சட்டத்துக்கு முரணான செயலாகும்.

"இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வரும் மாகாண உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் சேவையாளர்களையும் அதிகாரிகளையும் இணங்கண்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்தோடு, அவர்கள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.