கோளாவில் கயிற்றில் தொங்கிய நிலையில் பெண்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 02 பிரிவில்
வீடொன்றினுள் கயிற்றில் தொங்கிய நிலையில் 21 வயதுடைய இளம் குடும்ப பெண்ணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் கோளாவில் 02ஆம் பிரிவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் (03 வயது, 04 வயது) தாயான துரைராசா சர்மிளா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (26) அதிகாலை 5.00 மணிக்கு பின்னதாக வீட்டில் இருந்து கணவன் வேலைக்கு சென்றதன் பிற்பாடே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அயலவர்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது குறித்த பெண் தூக்கிட்டுள்ளதை அறிய முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் அம்பாறை விசேட தடயவியல் பொலிசாருடன் இணைந்து அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளது.

இதேவேளை அண்மைக்காலத்தில்  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தற்கொலை செய்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் இதற்கு முறையற்ற நுன்கடன் பெறுகையே பிரதான காரணமான அமைந்துள்ளது என, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.