யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுண்டிச்சாலையின் அவலங்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுண்டிச்சாலையின் 26.06.2018 அவலங்கள் நிறைந்த காட்சிகள்.
நிர்வாக கட்டமைப்பு இல்லை. ஒரு வெளி சிறுண்டிச் சாலைக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது நோயாளிகளோடும் அவர்களை பராமரிக்கும் உறவுகளோடும் தொடர்புபட்டது.
இவர்கள் மிக அவசரமாக கவனிக்கப்பட்டு அனுப்பட வேண்டியவர்கள். உணவுகள்,தேனீர் என்பவை பில் கட்டிய பின்னர் நீண்ட நேரம் காத்து நின்று (இருந்து அல்ல. இடமில்லை ) பெறவேண்டியுள்ளது.
அங்கு வேலை செய்வோர் யாரையும் கண்டுகொள்வதாக இல்லை. பில் போடும் இருவரும் பணம் வந்தால் சரி என்று பில் போட்டு பாசலை வீசிய வண்ணம் உள்ளனர்.
ஒழுங்கான வரிசையும் இல்லை. மக்கள் முண்டியடித்துக்கொண்டு எதையும் வாங்க முடியாதுள்ளனர்.
இவர்களிடம் பொருள் பெறுவதை விட ஒரு தாய் குழந்தை பெறுவது இலகுவானது. (குறைந்த நேரத்தில்) அத்துடன் இங்கே உணவப்பொருள் தவிர்ந்த நோயாளிகளுக்கு தேவையான ஏனைய பொருட்களான(பற்பொடி,பம்பஸ், சீப்பு போன்றவை) விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது
உள்ளக சிற்றுண்டிச்சாலை என்பது அதன் பயனாளிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைதல் வேண்டும்.
பொருத்தமான விதிமுறைகளுக்கு அமைய விரிவுபடுத்தப்படல் வேண்டும். இதற்கு தீர்வு என்ன? வைத்தியசாலை நிர்வாகம் சீர் செய்யுமா? 

Powered by Blogger.