இரும்புத்திரைக்காக விஷாலை பாராட்டிய பிரபல நட்சத்திரம்!

விஷாலின் இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யுடுவை பார்த்து விட்டு தெலுங்கு ஜாம்பவான் மகேஷ் பாபு விஷாலை பாராட்டியுள்ளார்.
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான இரும்புத்திரை படத்தில் சமந்தா, அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் கடந்த மாதம் தமிழில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
இந்த படத்தை பார்த்த தெலுங்கு ஜாம்பவான் மகேஷ் பாபு விஷாலையும், படக்குழுவையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Powered by Blogger.