மகிந்தவை பிரதமராக்கிய பின்னரே ஜனாதிபதி தேர்தல்!

மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் ஆக்கிய பின்னரே ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டுமெனவும் இது தொடர்பான நடவடிக்கைகளையே தாங்கள்
முன்னெடுத்து வருவதாகவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியினர் தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் போதே மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்க வேண்டும்.

அரசாங்கத்திலுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் மனம் வைத்தால் இதனை செய்யலாம். இதன் பின்னரே ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும். என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் டிலான் பெரேரா மற்றும் லக்‌ஷ்மன் யாப்பா ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


Powered by Blogger.