புலம்பெயர் மக்கள் உதவியை வேன்டி நிக்கின்றோம்!

புலம்பெயர் மக்கள் உதவி செய்தால் சேவையை விரிவுபடுத்த முடியும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


அமர் ஊர்தி சேவை இரண்டாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. இதுவரையில் சுமார் 76க்கும் மேற்பட்ட சேவைகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம், கிராமங்களில் உயிரிழக்கும் வறுமை நிலையில் உள்ளவர்களின் சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும், வைத்தியசாலையில் உள்ள சடலங்கள் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது.


எனினும், இந்த பணியை முற்றுமுழுதாக செய்யமுடியாத சூழ் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழக்கும் ஒருவரின் சடலங்களை கொண்டு செல்ல 50ஆயிரத்திற்கும் அதிகமாக செலவிடும் நிலை காணப்படுவதாகவும், இது வறிய மக்களுக்கு பெரும் சுமையாக அமைவதாகவும் கூறியுள்ளார்.


அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் வறுமை நிலையில் உள்ளவாகளின் சடலங்களை விமான நிலையத்தில் இருந்து கொண்டுவருவதற்கும் கொழும்பு போன்ற இடங்களில் உயிரிழக்கும் சடலங்களை எடுத்து வருவதற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அவற்றினை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சேவையினை மேலும் விரிவுபடுத்துவதற்கு புலம்பெயர் மக்களும் பணக்காரர்களும் உதவிகளை செய்தால் இந்த சேவையினை விரிவாக்கி இதன் மூலம் பல சேவைகளை வழங்க முடியும் எனவும் கோவிந்தன் கருணாகரம் கூறியுள்ளார். 
Powered by Blogger.