தபால்களை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்!

தபால் ஊழியர்கள் கடந்த சில தினங்களாக மேற்கொண்ட வேலைநிறுத்தம்
காரணமாக தேங்கிக் கிடக்கும் தபால்கள் மற்றும் பொதிகள் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கான விசேட வேலைத்திட்டம் நாளை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து தபால் ஊழியர் சங்கத்தின் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டாரநாயக்க தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்திருக்கும் தபால்களையும் பொதிகளையும் விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தபால் திணைக்களத்திற்காக பிரத்தியேக சேவைப் பிரமாணத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் தபால் ஊழியர்கள் கடந்த 14 நாட்களாக கடமைகளைப் பகிஷ்கரித்தார்கள்.
இந்த வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இருந்த போதிலும்இ தமது பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தைத் தொடரப் போவதாக திரு.பண்டாரநாயக்க அறிவித்துள்ளார்.
Powered by Blogger.