அப்போலோ: தலைமுறையைப் பாதுகாக்கும் இடம்!

நோய்களை, ‘தொற்று நோய்கள்’, ‘தொற்றா நோய்கள்’ என இரண்டு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கிறது மருத்துவ உலகம்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளால் ஏற்படும் டெங்கு, நிமோனியா, காலரா போன்ற சீஸன் நோய்கள் தொற்று நோய் வகையறாவுக்குள் அடங்கிவிடும். இவை அவ்வப்போது கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது உடனடியாகக் கண்டுபிடிக்கப்படாமல் கட்டுக்கு அடங்காமல் போகின்றன; இதற்கு சமீபத்திய உதாரணம் ‘நிபா’.

ஆனால், வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய், கல்லீரல் பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் முதலான பல நோய்கள், தொற்றா நோய்கள் எனப்படுகின்றன. இவை, ஒரு நாளில் வந்துவிடுவது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சினை அதிகரித்து, நோய் ஓரளவுக்கு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் வெளிப்படும். இதை இன்றைய தலைமுறையினர் பொருட்படுத்தாமல் இருப்பதால்தான் நோய் முற்றிய பிறகு மருத்துவமனையை நாடுகின்றனர்.

தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மரபியல் காரணங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற லைஃப் ஸ்டைல்தான், நோய்கள் அதிகரிக்க முக்கியக் காரணங்கள். இந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிந்தால், 80 சதவிகிதம் வரை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுப்பதைவிட, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, முழுமையாகக் குணப்படுத்துவதும், ஒருவருக்கு எந்தவிதமான நோய்கள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கு ஏற்ப வாழ்வியல்முறையை மாற்றிக்கொண்டு, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதையும்தான் அப்போலோ மருத்துவக்குழுமம் பரிந்துரைக்கிறது. ‘இது உங்களை மட்டுமல்ல; உங்கள் தலைமுறையைப் பாதுகாக்கும்’ என்பதையும் அறிவுறுத்துகிறது.

‘ஹெல்த் செக்கப் செய்ய நிறைய செலவாகும்’, ‘எனக்கு எந்த நோயும் இருக்காது, மருத்துவமனைக்குப் போனால் ஏதாவது ஒரு நோய் இருக்குன்னு சொல்லிப் பயமுறுத்திருவாங்க’ என்பன போன்ற எண்ணங்கள்தான், பலரை மருத்துவமனைக்கு வரவிடாமல் தடுக்கின்றன. ‘சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாகிடும்’ என சினிமாவில் ஒரு பிரபலமான வசனம் உள்ளது. உண்மையில் அது தவறு.

10 வருடங்கள் கழித்து, நாம் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஆட்பட்டு பலவீனமடையப் போகிறோம் என்பதை, இப்போதே கண்டுபிடித்து, அந்தப் பிரச்சினையைக் குணப்படுத்தவோ அல்லது 10 வருடங்களில் வரக்கூடிய தொந்தரவை, தள்ளிப்போடவோ நம்மிடம் இப்போது வசதிகள் வந்துவிட்டன.

அதற்கு நேரடி சாட்சிதான் சென்னையில் உள்ள பிரதான அப்போலோ மருத்துவமனைக்கு அருகில் அமைத்துள்ள அப்போலோ பர்சனலைஸ்டு ஹெல்த் செக்கப் (APHC) வளாகம். வழக்கமாக மருத்துவமனை என்றாலோ, மருத்துவப் பரிசோதனை என்றாலோ சிகிச்சைக்காக வருபவர்களுக்குள் ஒருவித பதற்றமும், பயமும் தொற்றிக்கொள்ளும். ஆனால், ஓங்கி உயர்ந்துள்ள முதன்மையான இந்தக் கட்டடத்தின் பிரதான வரவேற்பு தளத்தில் இருந்த அனைவர் முகத்திலும் தங்கள் உறவினர் வீட்டுக்கு வந்திருக்கும் நிம்மதியே இருந்தது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தாலும் மொழி அவர்களுக்குப் பிரச்சினையாகவே இல்லை. சீருடை அணிந்திருந்த அப்போலோ ஊழியர்களிடம் சிநேகமாகப் பேசுகிறார்கள்; அவர்கள் கூறும் வழிகாட்டுதலில் திருப்தியடைக்கிறார்கள்.

வரவேற்பு மேசையில் தங்களுக்கான பதிவை முடித்துக்கொண்ட பின் பரிசோதனைக்காக அவர்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களுக்குப் பொறுமையாகச் செல்கிறார்கள். நீண்ட வரிசையில்லை; ‘நீ முந்தி, நான் முந்தி’ என்ற சர்ச்சைகள் இல்லை. வசதியாக அமைக்கப்பட்ட சோபாக்களில் அமர்ந்து ஓர் அமைதியை அனுபவிக்கிறார்கள். அந்த அமைதியே அவர்களுக்கான உடலுக்கு வலிமையை, மனதுக்குத் தெம்பை அளித்துவிடக் கூடியதாக இருக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசோனிக், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, சிறுநீர், மலம் பரிசோதனைகள், ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று பிரத்யேகமாகச் செய்யப்படும் விசேஷ பரிசோதனைகள் என்று அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப தொடர்ச்சியாகச் சீராக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இப்படிச் செய்யப்படும் பரிசோதனைகளின் முடிவுகளில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டாலோ, இல்லை என்று நிரூபிக்கப்பட்டாலோ அதற்கான தீர்வுகளை, சிகிச்சைகளை, வழிமுறைகளை உடனுக்குடன் சொல்ல ஒரு மருத்துவக்குழுவே காத்திருக்கிறது.

பொதுவாக நம் உடலில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படும்போது அதைக் குணப்படுத்த நாம்தான் ஒவ்வோர் இடமாகத் தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால், அப்போலோ ஹெல்த் செக்கப் வளாகத்தில் வரும் அனைவருக்கும் ஒரு மருத்துவக்குழுவே காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
Powered by Blogger.