கோத்தாபய தேர்தலில் போட்டியிடுவதை அமெரிக்காதான் தீர்மானிக்க வேண்டும்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய
ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து முதலில் தீர்மானிக்க வேண்டியது அமெரிக்காவே என அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் வைத்து இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பயப்படாது தேர்தல‍ை எதிர்கொண்டு வெற்றிபெற்றோம்.  அவ்வாறிருக்கையில்,  கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் பயப்படுவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Powered by Blogger.