16 பேர் கொண்ட குழுவின் தீர்மானம் மிக்க கூட்டம் நாளை

கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்து கொள்வது
தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நாளை (01) இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு அறிவித்துள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது குறித்து நாளைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் நடுவில் இருந்து கொண்டு பயணிக்க முடியாது எனவும், ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு கூட்டு எதிர்க் கட்சியில் செயற்பட முடியாது என்ற கருத்து கூட்டு எதிர்க் கட்சிக்குள் எழுந்துள்ளதனால், 16 பேர் கொண்ட குழு இவ்வாறான ஒரு தீர்மானம் எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டு எதிர்க் கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்புக்களிலிருந்து நீங்கிக் கொள்ள வேண்டும் என்பது 16 பேர் கொண்ட குழுவுக்கு கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.