தியாகி பொன்.சிவகுமாரன் வீரவணக்க நாள்!

தியாகி பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச் செயற்பாட்டில் பொன். சிவகுமாரன் ஈடுபட்டிருந்த வேளை இலங்கை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974 ஆம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழின ஒடுக்கு முறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர் பொன். சிவகுமாரன்.தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5 ற்கு மறுநாள் ஆனி 6 ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.

தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர்.

இன்று அவரின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறு நடைபோடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.