புதிய அர­ச­மைப்­புத் தோற்­றால் மக்­க­ளி­டையே பிரி­வினை தோன்­றும் – சம்­பந்­தன் எச்­ச­ரிக்கை

துவேச – இன­வா­தச் சிந்­தை­யு­டன் செயற்­ப­டு­வோர் இந்த நாட்­டில் பெரும் எண்
­ணிக்­கை­யில் இல்லை. அவர்­கள் துர­திர்ஷ்டவ­ச­மாக மென்­போக்­கா­ளர்­க­ளை­விட அவர்­க­ளின் கருத்­துக்­கள் முதன்மை பெறு­கின்­றது. ஆனால் மென்­போக்­கா­ளர்­கள் ஒன்று சேர்ந்து இயங்­கு­கின்­ற­பட்­சத்­தில் புதிய அர­ச­மைப்­பா­னது மூன்­றில்­இ­ரண்டு பெரும்­பான்­மை­யோடு நிறை­வேற்­றப்­ப­டு­வ­தை உறுதி செய்­ய­லாம். இவ்­வாறு எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
இலங்கை வந்­துள்ள நோர்­வே­யின் அபி­வி­ருத்தி விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜாங்க செய­லர் ஜென்ப்­ரோ­லிச்க்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் குழு­வுக்­கும் இடை­யில் நாடா­ளு­மன்­றி­லுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் பணி­ய­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் சந்­திப்பு நடை­பெற்­றது.
இந்­தச் சந்­திப்­பி­லேயே இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
சந்­திப்­புத் தொடர்­பில் எதிர்­கட்­சித் தலை­வ­ரின் ஊட­கப் பிரிவு அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
நாட்­டில் நில­வும் தற்­கால அர­சி­யல் நிலை­கு­றித்­துச் செய­ல­ரைத் தெளி­வு­ப­டுத்­திய இரா.சம்­பந்­தன் கடந்த காலங்­க­ளில் இலங்கை தொடர்­பில் குறிப்­பாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வொன்­றினை எட்­டு­வது தொடர்­பில் நோர்வே அர­சின் பங்­க­ளிப்­புக்கு நன்றி தெரி­வித்­தார்.
பொரு­ளா­தார மற்­றும் வேலை வாய்ப்பு போன்­ற­வற்­றில் எமக்­குச் சம­உ­ரிமை வழங்­கப்­டு­வ­தில்லை. இத­னால் எம் மக்­கள் விரக்­தி­ய­டைந்­துள்­ள­னர். மாறாக அதி­கா­ரம் சரி­யா­கப் பகி­ரப்­ப­டு­மி­டத்து இந்­தப் பொரு­ளா­தார சமூ­கப் பிரச்­சி­னை­களை மிக­ப­ய­னுள்ள, நேர்த்­தி­யான வகை­யில் நிவிர்த்தி செய்து கொள்ள முடி­யும் என­வும் தெரி­வித்­தார்.
வடக்­கு­கி­ழக்­கி­லுள்ள காணி விடு­விப்­புத் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த இரா.சம்­பந்­தன் இந்த விட­யம் தொடர்­பில் முன்­னேற்­றம் காணப்­பட்­டா­லும் போர் முடி­வ­டைந்து 9 ஆண்­டு­கள் கடந்­துள்­ள­மை­யைக் கருத்­திற் கொள்­ளு­கின்ற போது இந்­தக் கரு­மங்­கள் இன்­னும் துரி­த­மாக இடம்­பெற்­றி­ருக்­க­வேண்­டும் என்­ப­த­னை­யும் வலி­யு­றுத்­தி­னார்.
ஆயு­தப் படை­யி­னர் இந்த நிலங்­க­ளில் பயிர்ச்­செய்கை செய்து விளைச்­சலை இந்­தக் காணி­யின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கே விற்­கின்ற துர்ப்­பாக்­கிய நிலை­மையை எடுத்­து­ரைத்த அதே­வேளை நல்­லி­ணக்­கம் மற்­றும் நிலை­யான சமா­தா­னத்­தி­னை­நோக்­கிச் செல்­வ­தற்கு இப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­கள் தடை­யாக அமை­வ­தி­னை­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் எடுத்­துக் கூறி­னார்.
வடக்கு கிழக்­கி­லுள்ள பல பிர­தே­சங்­க­ளில் காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் மற்­றும் அர­சி­யல்­கை­தி­க­ளின் விடு­தலை தொடர்­பில் மக்­கள் முன்­னெ­டுக்­கும் போராட்­டங்­கள் தொடர்­பில் குழு­வி­ன­ரைத் தெளி­வு­ப­டுத்­திய இரா­சம்­பந்­தன் எமது மக்­க­ளின் இந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்­கா­னச் சரி­யா­னத் தீர்­வினை எட்­டு­வ­தற்கு பன்­னாட்­டுச் சமூ­கம் காத்­தி­ர­மான ஒரு நிலைப்­பாட்­டினை எடுக்­க­வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­தி­னார்.
இலங்கை தொடர்­பில் நோர்வே அரசு எடுத்­து­வந்­துள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு நன்றி தெரி­வித்த இரா.சம்­பந்­தன் தொடர்ந்­தும் அவர்­க­ளது ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பு இருக்க வேண்­டும் என்­ப­த­னை­யும் வலி­யு­றுத்­தி­னார் – என்­றுள்­ளது.

No comments

Powered by Blogger.