பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு -வவுனியாவில் வரவேற்பு!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற புணர்வாழ்வு வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு இன்று வவுனியாவில் வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
வவுனியா குருமன்காடு கலைமகள் மைதானத்தில் வர்த்தக சங்கசட செயலாளர் கோ. சிறிஸ்கந்தராயா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் சர்வமததினர், அரச தலைவரின் இணைப்பு செயலர் அபயகுணசேகர, வடமாகாணசபை உறுப்பினர் ம. தியாகராயா, அரச தலைவரின் வன்னிமாவட்ட இணைப்பாளர வாசல,வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட ஐக்கியதேசிய கட்சி அமைப்பாளர் கருணாதாச, தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் வே. மகேந்திரன் வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி,அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.