தென்மாகாணத்தில் வைத்தியர்கள் அதிகரிப்பு!

தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் நிலைமையை எதிர்கொள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறுவர் அவசர சிகிச்சைப் பிரிவை விரிவுப்படுத்த சுகாதார சேவை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 தற்போது போதனா மருத்துவமனையின் சிறுவர் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் பிரிவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 48 சிறுவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த மே மாதத்தில் மாத்திரம் வைரஸ் தொற்று காரணமாக 14 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், குறித்த காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் தமது மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளது என கராப்பிட்டிய போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் ஜயம்பதி சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

 எனினும், தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் தென் மாகாணத்தில் பரவும் காய்ச்சல், சிறு குழந்தைகளுக்கிடையே அதிகளவில் பரவும் அபாயம் உள்ளதாக மாத்தறை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளரான மருத்துவர் ஏ.டீ.யூ கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 வயது முதிர்ந்த நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிந்துள்ளபோதும், சிறுவர் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.