இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சுறாமீன்களின் இறகுகள் கடத்தப்படுகின்றன!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சுறாமீன்களின் இறகுகள் ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக, ஏ.எஃப். பி செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

 மிகவும் அரிய வகையான சுறாமீன்களின் இறகுகளும், மறைக்கப்பட்டு விமானத்தின் ஊடாக ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

 தடைக்கு மத்தியிலும், ஹொங்கொங்கில் சுறாமீன்களின் இறகுகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.  இந்தநிலையில் கடந்த மாத ஆரம்பத்தில் மாத்திரம் 989 கிலோ கிராம் எடைகொண்ட சுறாமீன்களின் இறகுகள் கொழும்பில் இருந்து ஹொங்கொங்கிற்கு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 சிங்கப்பூரின் ஊடாக இந்த கடத்தல் இடம்பெறுகிறது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட மீன் இறகுகளுடன், அரிய வகையான இறகுகளும் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Powered by Blogger.