புதினை சந்திக்கும் ட்ரம்ப்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஜூலை 16ஆம் தேதி ஃபின்லாந்தில் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு கடந்த ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் அரங்கேறியது. இந்த சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கிம் உறுதியளித்திருந்தார். கிம் உடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

இருதலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு புதன்கிழமையன்று ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவால் வெளியிடப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா அல்லாத நாட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்த அவர் இடம் மற்றும் நேரம் இன்று (ஜூன் 28) அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் யான் போல்டன், பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை இன்று (ஜூன் 28) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஃபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் ஜூலை 16ஆம் தேதி இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இந்த சந்திப்பின்போது, சிரிய உள்நாட்டுப் போர் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.