வன்னி காடுகளில் இறக்கபடும் மத யானைகளால்!

சட்டைப் பையில் கொண்டு செல்லும் கஞ்சாவை பிடிக்கும் பொலிசாருக்கு பாரா ஊர்திகளில் கொண்டு வரப்பட்டு எமது
பகுதிகளில் இறக்கி விடப்படும் யாணைகளைத்தெரியவில்லையா ?

ஏன் அவற்றினைப் பிடிப்பதற்கு பொலிசாரோ அல்லது திணைக்களத்தினரோ பின் நிக்கின்றீர்கள் என வவுனியா வடக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பூபாலசிங்கம் கேள்வி எழுப்பினார்.

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிப் பிரதேசத்தில் விவசாய விஸ்தரிப்பு நிலையம் மற்றும் விவசாய விரிவாக்க நிலையத்தின் அலுவலக வளாகத்திற்குள் உள்நுழைந்த திணைக்களத்திற்குள் நேற்றுக்காலை யானைகள் உட்புகுந்து அங்கே நாட்டங்பட்டிருந்த வாழை , தென்னை என்பனவற்றை அழித்து துவம்சம் செய்துள்ளது.

இதனால் பாரிய அழிவைச் சந்தித்தமை தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

நெடுங்கேணியில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் உள்ள குறித்த இரு திணைக்கள அலுவலகத்தின் வளாகத்திற்குள் நேற்று அதிகாலை புகுந்த  யாணைகளே இவ்வாறான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இரு அலுவலகங்களும் வவுனியா - முல்லைத்தீவு பிரதான சாலையோரமே அமைந்துள்ளன. இதேநேரம் இவ்வாறு யாணைகளின் தொல்லை மற்றும் அச்சம் காரணமாகவே எமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கடந்த 8 ஆண்டுகளாக நாம் தொடர்ந்தும் குரல்கொடுத்தே வருகின்றோம். ஆனால் அதிகாரிகள் அதிலும் குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களம் எந்த நடவடிக்கையுமே எடுப்பது கிடையாது.

தாங்கள் பிரச்சணையில் மட்டுமே குறியாகவுள்ளனர். யாணைப்பாதுகாப்பு வேலி தொடர்பில் கேட்காத சந்தர்ப்பமே கிடையாது. இதே நேரம் எமது பகுதியில் யாணைகள் அதிகரிப்பதேற்கே இந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்தான் முக்கிய காரணம்.

அதாவது தென் பகுதியில் இவ்வாறு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யாணைகளை மயக்க ஊசிகளை சுட்டு அந்த யாணைகளை ஏற்றிவந்து எமது பகுதிக்குள் இறக்கி விடுகின்றனர்.

இது தொடர்பில் கேட்டால் யாணைகளை காடு மாறி இறக்கினால் அவை சாந்தம்கொள்ளும் என்கின்றனர். ஆனால் வடக்கு மாகாணத்தில் அட்டகாசம் புரியும் ஓரு யாணை ஏனும் இந்த திணைக்களம் வெளியிடத்திற்கு கொண்டு சென்றதாக இதுவரை எந்த தகவலுமே கிடையாது.

அவ்வாறானால் தமிழ் மக்கள் சகல வழிகளிலும் அடக்கப்படுகின்றனரா என்ற சந்தேகமே வலுக்கின்றது. இதேநேரம் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அண்மையில் ஓர் சிறுத்தை ஊருக்குள் புகுந்தவேளையில் அதனை அடித்து கொலை செய்யாமல் தவிர்த்திருக்க வேண்டும்.

மீறி மனித உயிருக்காக இடம்பெற்றிருந்தால் அதனை மனித நேயத்துடன் அனுகியிருக்கலாம். இருப்பினும்  சிறுத்தைக்காக வழக்குத் தாக்கல் செய்த வன ஜீவராசிகள் திணைக்களம் இன்றுவரை மனித உயிர்களின்  பாதுகாப்பிற்காக நாம் கோரும் பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது மட்டும் எந்தவகையில் நியாயமானது.

இவை தொடர்பிலும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அமைச்சர்கள் சற்று சிந்திக்க வேண்டும். வன விலங்குகளில் நீங்கள் காரின்மியமாக இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் மனித உயிரில் தமிழன் உயிர்போனால் பரவாயில்லை என்ற மனநிலையை முதலில் கைவிட்டு எமக்கான உறுதிப்பாட்டையும் தாருங்கள் என்றே நாம் உங்களிடம் கோரி நிற்கின்றோம்.

இதேநேரம் எமது பகுதியில் தொடர்ச்சியாக யாணைகளின் தொல்லை இடம்மெறும்போதெல்லாம் குரல்கொடுத்தே வந்தோம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் கிடையாது. இதனால் இனி எமது பகுதிக்கு இது தொடர்பான அமைச்சர்கள் எவர்வந்தாலும் எதிர்ப்பு போராட்டத்தினை தவிற எமக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.